காணிப்பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை கிடையாது- பொன்செல்வராசா

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
ட்டகளப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சனை என்பது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது பொதுவாக இரண்டு இனத்துக்கும் புரையோடிப் போய்யுள்ள பிரச்சனையுமாகும். 

அந்த வகையில் இரண்டு இனங்களும் ஒரு அரசாங்கத்தை ஆதரிக்கும் இனமாக இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே அரசாங்கத்தை ஆதரிக்கின்ற இரண்டு இனங்களும் கூட்டாக இணைந்து சில பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தி மாவட்டத்தில் நல்ல முடிவினை எடுபதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது என்றென்றும் ஆதரவாகவும், நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுசரனையாகவும் இருக்கும் என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல் வாதியுமான பொன்செல்வராசா இணைய நாளிதல்களுக்கான கேள்விகளுக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராசாவிடம் நிகழ்கால அரசியல் மாற்றத்துடன் சம்பந்தப்பட்டு தொடுக்கபட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதிகளும் அதன் காணொளியும் விலாவாரியான விளக்கத்துடன் இணைய நாளிதல் வாசகர்களுகாக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றினைந்து நாட்டில் ஆட்ச்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கினை வகித்தது. அதனடிபடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர் என்றவகையிலும் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியிலும் இரண்டு சமூகங்களுக்கும் எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

பொன்செல்வராசா:- பத்து ஆண்டுகாலமாக கடந்த ஆட்ச்சியிலே இரண்டு சமூகங்களும் வேதனையை அனுபவித்து வந்தவர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத விடயமாகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்த அரசியல் ஒன்றை நடத்தாவிட்டாலும் கூட என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்ச்சி ஆசனங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் கடந்த பத்து ஆண்டுகாலமாக அரசாங்கத்துடன் இணைந்த அரசியல் ஒன்றையே கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் காரணமாக அவர்கள் விரக்த்தி அடைந்த நிலையில் அதிலும் முக்கியமாக முஸ்லிம் மக்களுக்கு அரசின் மீது கசப்புணர்வு ஏற்படும் படியாகவே இருந்தது. ஆனால் இறுதிக் கட்டம் வரை முஸ்லிம் அர்டசியல்வாதிகள் அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

மறுபக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சென்ற அரசாங்கத்துடன் எதிர்ப் அரசியல் ஒன்றையே நோக்காக கொண்டிருந்தனர். ஆனால் சென்ற ஜானதிபதி தேர்தலில் இரு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றிணைந்து புதிய ஜானாதிபதியை உறுவாக்குவதற்க்கு ஊன்று கோளாக இருந்துள்ளனர். அந்தவகையில் புதிய அரசாங்கமனது நூறு நாள் வேலைத்திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. அதற்கு பிற்பாடு பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய இந்த அரசாங்கமானது ஒரு தொங்கு பாலத்தைப் போலவே சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த அரசாங்கத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து வருக்கின்ற பாரளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டு அரசாங்கத்தை இஸ்தீரப்படுத்துவதற்க்கு முன்வர வேண்டும்.

அஹமட் இர்ஸாட்:- புதிய அரசாங்கத்தில் மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவாராக பேசப்பட்டு வருகின்றீர்கள். இது சம்பந்தமாக இரு சமுகங்களுக்கும் எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

பொன்செல்வராசா:- இதுவரைக்கும் மட்டக்களப்பு மாவடத்துக்கோ அல்லது ஏனைய மாவட்டங்களுக்கோ அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யபட வேண்டும் என்பது உண்மை. அந்த வகையில் தான் அதற்கு பொருத்தமானவன் என்றே நினைக்கின்றேன். ஆனால் அரசாங்கத்தின் முடிவும் எவ்வாறு அமையப் போகின்றது என இப்போது எதுவும் கூற முடியாது. மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்களை விடவும் அதிகமாக உள்ளதனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளிக்கின்ற கட்ச்சி என்ற ரீதியிலும் தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என நம்புகின்றேன். அரசு இதுவரைக்கும் அது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை.

அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தின் அராங்க உயர் நிருவாக மட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என உங்களுடைய கட்ச்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்றது. ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன?

பொன்செல்வராசா:- ஊடகங்கள் எதைச் சொன்னாலும்…. நாங்கள் இப்பொழுத்துதான் புதிய ஜானாதிபதியை உறுவாக்கி இருபது நாட்கள் சென்றுள்ள நிலையில் அரச உயர் நிருவாக மட்டங்களில் மாற்றம் ஏற்படுத்துவது சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக் கொள்ளவுமில்லை, அதற்கான முடிவை நாங்கள் எடுக்கவுமில்லை. ஆனால் நாங்கள் சற்று பொறுமையுடம் இருக்கின்றோம். தற்போது இருக்கின்ற நிருவாகிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்ற ரீதியில் இந்த விடயத்தை பார்க்கும் போது நாங்கள் சண்டித்தனம் காட்ட விருப்பவிலை. அதற்குரிய நேரங்கள் வருக்கின்ற பொழுது இந்த விடயத்தில் மிகவும் கவணமாகவும் அவதானமகவும் நாங்கள் காய்களை நகர்த்தலாம் என நினைக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- பிரதி அமைச்சர் அமீர் அலி பதவியேற்றதன் பிற்பாடு ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்… மாவட்டத்தின் சகல நடவடிக்கைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தே முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக நீங்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள்?

பொன்செல்வராசா:- முஸ்லிம் கட்ச்சிகளும் தமிழ் கட்ட்சிகளும் புதிய ஜனாதிபதியை உறுவாக்குவதில் வேகமாக செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர்கள். இந்த நிலையில் இரண்டு பேருடைய கருத்துக்களும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் முஸ்லிம் கட்ச்சிகளும் தமிழ் கட்ச்சிகளும் மாவட்டத்தின் நிருவாகங்களையோ அல்லது ஏனைய விடயங்களையோ முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி மாவட்டத்தின் உள்ள அரசியல்வாதிகளினாலும் அரச நிருவாக உத்தியோகத்தர்களாலும் செய்யப்பட்ட ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே தனது முதல் வேலை எனத் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைகளுக்கு நீங்கள் பூரண ஒத்துளைப்பு வழங்குவீர்களா?

பொன்செல்வராசா:- எம்மைப் பொறுத்தவரையில் தப்பிழைத்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். அது ஊழலாக இருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்குள்ளது. சந்தர்ப்பம் வருகின்ற பொழுது ஊழல் செய்தவர்களுக் எதிராக நட்டவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தாயாராகவே உள்ளோம். ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு வேறானது. அதாவது நாங்கள் வென்று விட்டோம் என்பதற்காகா முண்டியடித்துக் கொண்டு அமைச்சுப் பொறுபுக்களை ஏற்கும் பாராளுமன்ற உறுபினர்கள் அல்ல. தமிழ் மக்களின் இலக்கு வேறாக உள்ளது. இந்த நாட்டிலே புரையோடிப் போய்யுள்ள இனப் பிரச்சனையை ஒரு புறம் வைத்தாலும், அவசியாமான பிரச்சனையாக எங்களுக்கு பல வருடங்களாக தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களாக உள்ளார்கள். அவர்களில் சில பேருக்கு நீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது போல் பலருக்கு நீதி மன்றத்தில் வழக்குகளை தாக்கள் செய்யாது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இப்படிப்பட்ட இளைஞர்கள் பொது மன்னிப்பின் கீழ் அல்லது வேறு விதமாகவோ விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம். மற்றையது எங்களுடைய பிரத்தியேக காணிகள், சொந்தக் காணிகள் இராணுவ மயமாக்களுக்காக வடகிழக்கிலே கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடமராட்ச்சியிலே ஏறக்குறை 6500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகள், கோவில்கள், பாடசாலைகள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அந்த நிலைமை மாற வேண்டும். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீதி மன்றத்தை நாடியுள்ளனர். வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ள போது கடந்த அரசாங்கம் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கோவில்கள், பாடசாலைகள் போன்றவற்றை அழித்திருக்கின்றார்கள்.

இது ஒரு மணிதபிமானத்துக்கும், சட்டத்துக்கும் முறனான செயலாகும். இராணுவ மயமாக்களுக்காக மக்களின் காணிகளை பாவிப்பது கண்டிக்கதக்க செயலாகும். இப்போது மக்கள் குடியமர்த்தப்படுகின்ரார்கள். அதற்கு பெளத்த பிக்குகள் கூட உதவிகளை செய்து வருக்கின்றனர். இந்த நிலைமை முற்றிலும் மாற வேண்டும். வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற மக்கள் அங்கே குடியமர்த்தபடுகின்ற பொழுதும், காணிகளை கொள்வனவு செய்கின்ற பொழுதும், பயிர்செய்கையினை மேற்கொள்கின்ற பொழுதும் நாங்கள் மெளனமாக இருக்க முடியாது. ஆகவே இவ்வாறான பிரச்சனைகளுக்கெள்ளாம் முடிவெடுக்கப்பட்டதன் பிற்பாடுதான் நாங்கள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் தீர்வினை எட்டும் நோக்கில் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்வோம்.

இந்த தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படாத காரணத்தினால்தான் அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரன்பாட்டு அரசியல் நடந்து கொண்டிருந்தது. கடந்த 65 ஆண்டுகாலமாக தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்ச்சி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இது போதாமை எனக் கண்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அதுவும் 2009ம் ஆண்டு மெளனிக்கப்பட்ட பிறகும் கூட இந்த நாட்டில் ஒரு பயங்கரவாதம் இருந்தது. அரசாங்கம் சொல்லலாம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என. ஆனால் அது பாயங்கரவாதம் அல்ல மாறாக அது விடுதலைப் போராட்டம். ஒரு இனத்துக்காக அதே இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போராடுகின்ற பொழுது அது பயங்கரவாதமாக மாற்றமைய முடியாது. இந்த நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்தின் பல நாடுகளிலும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய இளைஞர்களை நாங்கள் பயங்கரவாதிகள் எனக் கூறமுடியாது. மாறாக அவர்களை ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய போராலிகள் என்றுதான் வர்ணிப்போம்.

ஆகவே இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டதற்க்கு முரன்பாட்டு அரசியல், இனத்துவேசம் போன்றவையே காறணங்களாக உள்ளது. ஆகவே இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் . புரையோடிப் போய்யுள்ள இனப்பிரச்சனைக்கு நல்ல முடிவினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த புதிய அரசாங்கத்தை உறுவாக்குவதற்க்கு முன்னின்று உழைத்துள்ளோம்.` ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக பிரதம மந்திரியையும், ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையடியுள்ளோம். நாங்கள் மேற் கொண்ட கலந்துரையாடல்களுக்கு அழகான பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் இப்போது எடுக்கபட்டும் அதற்கான பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறையில் இருக்கின்ற இளைஞர்களை விடுவிப்பது சம்பந்தமாக நீதி அமைச்சர் ராஜபக்ஸ சார்பான அறிக்கை ஒன்றினையும் அன்மையில் வெளியிட்டிருந்தார்.

ஆகவே நல்ல விடயங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. எல்லாவற்ரையும் நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அந்தவகையில் புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் நல்ல விடயங்களை முனெடுக்கின்ற பொழுது அரசாங்கத்துக்கான எமது ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். நல்லதை செய்கின்ற அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டியது எமது கடமையாகும். தவறுகள் நடக்கின்ற பொழுது அதனை தட்டிக் கேட்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம். அதனால்தான் இது வரையும் நாங்கள் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம். அவ்வாறில்லாமல் அமைச்சுப் பதவிகளை நாங்கள் பொறுப்பெடுத்தால் எங்களுடைய வாய்கள் அடைக்கப்பட்டு விடும்.

அஹமட் இர்ஸாட்:- தற்போது கிழக்கு மாகான சபையில் ஒரு தளம்பலான நிலைமை காணப்படுகின்றது. கிழக்குமாகான தேர்தலுக்குப் பிற்பாடு தளம்பல் நிலை காணப்பட்ட போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஆட்ச்சியமைபதற்காக அழைத்திருந்தீர்கள், அதிலும் அவர்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சுப் பதவியையும் தருவதாக கூறியிருந்தீர்கள். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. தற்போது அவர்களிடத்தில் ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்யுமாறும் உடன் படிக்கைக்கு மீண்டும் வருமாறும் அழைக்கின்றீர்கள். ஆகவே இந்த பிரச்சனையை எவ்வாறு கையாளப் போகின்றீர்கள்?

பொன்செல்வராசா:- இது உண்மையிலே துர்ப்பார்க்கிய நிலைமையாகும். நாங்கள் சென்ற மாகான சபைத் தேர்தலில் 6500வாக்குகள் கூடுதலாகவோ அல்லது இரண்டு உறுப்பினர்களை அதிகமாக பெற்றிருந்தால் மாகான சபையை நாங்கள் ஆட்ச்சி செய்திருப்போம். கிழக்கு மாகானம் தமிழ் பேசுகின்ற மக்களின் தனி மாகானாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இந்த மாகானத்தில் முதலமைச்சராக வருகின்றவர் யாராக இருந்தாலும் தமிழ் பேசுக்கின்றவராகவே இருந்த்தல் வேண்டும். அந்தவகையில் முஸ்லிம் காங்கிரசின் உதவியை நாடினோம். நாங்கள் வெள்ளித்தட்டில் வைத்து முதலமைச்சுப் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுத்தும் அதனை அவர்கள் தட்டிக்களித்துவிட்டு மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து புதிய மாகான ஆட்ச்சியினை அமைத்து அரசாங்கத்தின் சார்பான முதலமைச்சரையும் உறுவாக்கினார்கள்.

ஆனால் இன்று புதிய ஜானாதியின் வருகையின் பிற்பாடு தளம்பல் நிலை ஏற்பட்டு கிழக்கு மாகான சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்ரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ், போன்ற கட்ச்சிகளும் தளம்பல் நிலையில் உள்ளதனால் முதலில் ஒருங்கினைந்து முதலமைச்சரை தெரிவு செய்யும் பொறுப்பு இந்த கட்ச்சிகளுக்கு உள்ளது. இந்த வகையில் அதிக ஆசனங்களை சபையில் வைத்துள்ள எங்களுடைய கட்ச்சியானது முதலமைச்சரைப் பெறுவதற்கு எல்லாவகையிலும் பொறுத்தமான கட்ச்சியாகும். அந்தவகையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை விட்டுக் கொடுப்பினை செய்து எங்களுக்கு அந்த வாய்ப்பினை தறுமாறு வேண்டினோம். ஆனால் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். வேறு விதமாக அவர்கள் அதனை பெற்றுக் கொள்ளவதற்கு முயற்ச்சியினை எடுத்து வருக்கின்றனர். இன்னும் பல அரசியல் பிரச்சனைகளை எதிர்காலத்தில் முகம் கொடுக்கவுள்ளதனால் சிறீலங்கா முஸ்லிம்காங்கிரசானது அவர்களது முடிவினை மீள்பரிசீலனை செய்து கொள்ளவேண்டும். ஏனென்றால் முதலமைச்சுப் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் போக வேண்டும் என்பதில் முஸ்லிம் மக்கள் அக்கரையுடன் உள்ளனர். அதனோடு இந்த நாட்டில் இரு சமூகங்களுக்கிடையேயும் ஒற்றுமையானது எதிர்காலத்தில் தொடர வேண்டும் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதாரவினை வழங்கி முதலமைச்சரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு நியமிக்கின்ற அளவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம்களின் காணிப்பிரச்சனை சம்பந்தமாக நீங்கள் முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் யாரை நீங்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளளாக ஏற்றுக்கொள்வீர்கள்?

பொன்செல்வராசா:- இந்த விடயத்தில் நாங்கள் ஏக பிரதிநிதிகள் என்ற விடயத்துக்கு வரவில்லை. ஏன்னென்றால் இன்று அரசாங்கத்தை ஆதரிக்கின்ற முஸ்லிம் கட்ச்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்ரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ், நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணி போன்ற சகல கட்ச்சிகளையும் உள்ளடக்கிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- மட்டகளப்பு மாவட்டமானது 2400 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்டதாக இருந்தாலும் முஸ்லிம் மக்களின் குடியிருப்பானது வெறும் 24 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் மக்கள் எல்லோரும் அடிப்படை பிரச்சனைகள், இன்னல்கள், தூய குடிநீர் பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள், கழிவகற்றல் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றை பாரியளவில் எதிர்கொள்கின்றனர். இந்த வகையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் இப்போது செல்வாக்கு பெற்றுவரும் உங்களுடைய கட்ச்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மூத்த பழுத்த அரசியல் வாதியான நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

பொன்செல்வராசா:- நிச்சயமாக நாங்கள் முன்பு வேறுவிதமான அரசியலில் இருந்து வந்தோம். அதே போன்று முஸ்லிம் கட்ச்சிகள் எல்லாம் ராஜபக்ஸ்ஸ அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முற்றாக முந்திய அரசாங்கங்களை எதிர்த்துக் கொண்டே வந்தது. அந்த நிலையில் முஸ்லிம்களுக்கும் எங்களுக்குமிடையில் காணிப்பிரச்சனை என்று வரும்போது அதனை எதிர்கொள்வதில் பாரிய பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. ஏக பிரதிநிதிகள் என முஸ்லிம் கட்ச்சிகளில் எதனையும் எத்துக்கொள்ள முடியாது. அந்தவகையில் புதிய ஜனாதிபதியை ஆதரித்த முஸ்லிம் கட்ச்சிகளும் நாங்களும் ஜனாதிபதியை ஆதரித்தவர்கள் என்ற ரீதியில் காணிப்பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது நெகிழ்வுத்தன்மையின் அடிபடையில் வெற்றிகாணலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றதைப் போல் இரண்டு இனங்களின் தலைமைகள் பேசுகின்ற பொழ்து விட்டுக் கொடுப்புடனும், திறந்த மனதுடன் பேசுகின்ற பொழுதும் இந்த காணி பிரச்சனை விடயத்தில் வெற்றியடையலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- புதிய ஜனாதிபதியை கொண்டு வருவதில் உங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்ச்சியானது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் உங்களுக்கும் எதிராகவும் மஹிந்த ராஜபக்ஸ்ஸவுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட கட்ச்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தற்போது புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டும், இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட்டும் வருக்கின்றனர். இந்த நிலையில் இது சம்பந்தமாக உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

பொன்செல்வராசா:- உண்மையில் இது ஒரு சிக்கலான கேள்வியாகும். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவதானத்துடன் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். எந்த தேர்தலிலும் மஹிந்தவுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை. 2005ம் ஆண்டு முக்கிய தேவைப்பாட்டின் காரணமாக தேர்தலை நாங்கள் பகிஸ்கரித்தோம். அதனால் ராஜபக்ஸ்ஸ வெற்றியடைந்தார். தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரித்ததினால் அன்று வெற்றிபெற்ற ராஜபக்ஸ்ஸ இம்முறை தமிழினம் முக்கியமாக சிறுபான்னமை இனம் வாக்களித்ததினால் தோல்வி அடைந்துள்ளார். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் கவணமாக இருக்கின்றோம். அதனால் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் கைவிடத் தயாரில்லை. அதுமட்டுமல்லாமல் மக்களின் நாடி, நகர்வு என்பவற்றை அறிந்தே நாங்கள் காய்களை நகர்த்துவதுடன் மக்களோடு மக்களாக பழகுகின்றவர்கள். நாங்கள் கட்டளை இடுகின்ற கட்ச்சியல்ல. மக்களுடன் இணைந்து செயற்படுகின்ற கட்ச்சி என்பதனால் மக்கள் எதைச் சொல்கின்றார்களோ அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- ஒரு கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்பிக்களை பொறுப்பேற்றால் முத்த அர்சியல் வாதியான நீங்கள் எந்த அமைச்சினை பொறுப்பேற்க தயாராக உள்ளீர்கள்?

பொன்செல்வராசா:- இந்த விடயம் சம்பந்தமாக இப்போது நான் பதிலளிக்கத் தயாரில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -