குறிப்பிட்ட சில பிரதேசங்களில் இருந்து வருகின்ற மீனவர்கள் தமது தேவைக்காக (வியாபார நோக்கமற்று) பொதுக்குளங்களில் மீன்பிடிக்க கடந்த அரசாங்கத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் அவ்வாறான குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான தடைகளை நீக்கி வியாபார நோக்கமற்ற மீனவர்களுக்கு எல்லாக்குளங்களிலும் மீன் பிடிப்பதற்கான அனுமதியினை அவ்வப்பிரதேச மீனவர் சங்கங்களினூடாக உரிய அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் என வியாபார நோக்கமற்ற மீனவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
.jpg)