ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவி எரிப்பு இன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்றது.
இக்கொடும்பாவி எரிப்புக்கு பின்னர் மக்கள் ஆரப்பட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த கொடும்பாவி எரிப்பு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏராவூர் ஹாபீஸ் நஸீருக்கு வழங்க முடிவெடுத்தமையைக் கண்டித்தும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள தீர்மானத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜமீலுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கவும் என்றும் மக்கள் கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








