அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிக்கும் அமைச்சர் ரிஷாத்;அமைச்சர் ஹக்கீமுடன் காலை அவசர சந்திப்பு!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுக்குமிடையில் இன்று  (04) காலை 6.30 மணிக்கு அவசர சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சமூகத்தின் நலன் கருதி இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்துக்கு வரும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனது கட்சி ஒரு தீர்மானத்துக்கு வருவதில் சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. அத்துடன் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளமாட்டேன். மேலும் அமீர் அலி விடயத்திலும் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :