சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொண்ட அபிவிருத்தியை பார்வையிட வருகைதந்த செஞ்சிலுவைக் குழு!

த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சுனாமி அனத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடுவதற்கு வெளிநாட்டு செஞ்சிலுவைக் குழு ஒன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் வைத்து மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை பற்றி இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட இக்குழு காத்தான்குடி தள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியாசலையின் தற்போதைய நிலை பற்றி வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தினால் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிருமானிக்கப்பட்டதாகும்.

சுனாமி தாக்கத்தினால் பாதிப்புற்ற மாக்களுக்காக வெளிநாட்டு செஞ்சிலுவைச் சங்கங்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, பொரியகல்வாறு வைத்தியசாலை, ஒந்தாச்சிமடம் 116 வீட்டுத்திட்டம், வாகரை வீட்டுத்திடம், நாசிவன்தீவு வீட்டுத்திட்டம், போன்ற பல பாரிய அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பில் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே, ஒஸ்றியா, கொங்கொங், ஐஸ்றின், ஆகிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கங்களிலிருந்து 6 பேர் கொண்ட குழுவே வந்துள்ளது.

இவர்கள் மட்டக்களப்பில் ஒரு வாரகாலம் தாங்கியிருந்து மேற்படி செஞ்சிலுவை அமைப்புக்களால் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிறைவேற்று அதிகாரி வே.பிறேகுமார் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :