இரு­பத்­தைந்து லட்சம் வாக்கு வித்­தி­யா­சத்தில் ஜனா­தி­பதி வெல்வார்!இலங்கை தேசிய முன்­ன­ணி

டந்த ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­காவை வென்­றது போன்று வரு­கின்ற தேர்­த­லிலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 25 லட்சம் வாக்கு வித்­தி­யா­சத்தில் வர­லாற்று வெற்றி பெறுவார் என்று கருத்­துக்­க­ணிப்­பொன்றில் தெரிய வந்­துள்­ள­தாக இலங்கை தேசிய முன்­ன­ணியின் தலைவர் விமல் டி. கமகே தெரி­வித்தார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலை முன்­னிட்டு தமது கட்­சியின் நிலைப்­பாடு பற்­றியும் ஜனா­தி­பதி வெற்றி பெற வேண்­டி­யதன் அவ­சியம் பற்­றியும் ஊடகம் வாயி­லாக மக்­களை தெளி­வு­ப­டுத்தும் முக­மாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

இது­வ­ரையில் எமது கட்சி உறுப்­பி­னர்கள் வீடு­வீ­டாக சென்று மக்­க­ளுக்கு தெளி­வூட்­டி­யுள்­ளனர். அதன்­போது மேற்­கொள்­ளப்­பட்ட கருத்துக் கணிப்­பொன்­றி­லேயே இவ்­வாறு தெரிய வந்­துள்­ளது.

மேலும், சந்­தி­ரிகா, ரணில், மைத்­திரி ஆகியோர் கறுப்பு பணத்திற்­காக தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். யுத்­தத்தை வெற்றி கண்ட கரும் சிங்­க­மான ஜனா­தி­பதி பொது வேட்­பா­ள­ரையும் வெற்றி கொள்வார் என்று நம்­பு­வ­தோடு இனி எஞ்­சி­யுள்ள காலப்­ப­கு­தி­யிலும் 50 ஆயிரம் வீடு­க­ளுக்குச் சென்று தேர்தல் பற்­றிய விழிப்­பு­ணர்­வு­களை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­த­வுள்ளோம். அத்­தோடு ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ 4ஆவது முறை போட்­டி­யிட்­டாலும் அவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்போம்.

தென்னை மரத்தின் சகல பாகங்­க­ளிலும் பய­னுள்­ளது. அதனை நாம் மதிப்­ப­தில்லை. மாறாக பய­னற்ற அரச மரத்­திற்கே தெய்­வத்தின் இருப்­பிடம் என நீர் ஊற்றி அபி­ஷேகம் செய்­வது போலதான் மஹிந்­தவை விடுத்து மைத்­தி­ரிக்கு வாக்­க­ளிப்­பது.

இது­வரை எந்த பொது வேட்­பா­ளரும் நாட்டின் ஐக்­கி­யத்தை பற்றி பேசி­ய­தில்லை. காரணம் அவர்கள் பிரி­வி­னை­வா­திகள் என்ற உண்­மையை மக்கள் அறிந்­த­தால்தான் 25 முறைக்கும் அதி­க­மாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். மீண்டும் அவரை பிரதமராக அமர்த்த முனைவது அரசியல் ரீதியிலான சதித்திட்டம். இதனை வென்று ஜனாதிபதி இன்னும் 20 வருட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே தாம் விரும்புவதாக அவர் தமது உரையின்போது கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :