சாய்ந்தமருதில் சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைத்தலும் கருத்தரங்கும்!

 எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

சாய்ந்தமருது பிரதேசசெயலாளர் எல்லைக்குள் கிராமிய மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் 2014-11-23 ல் சாய்ந்தமருது 10ம் பிரிவில் அமைந்துள்ள பல்தேவைக்கட்டிடத்தொகுதியில், சாய்ந்தமருது 10ம் 12ம் பிரிவுகளுக்கான கிராமிய மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்கும் நிகழ்வும் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் சிறுவர் உரிமை மேன்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலா தலைமையில் இடம்பெற்றது.

இதில் வளவாளராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் கலந்து கொண்டு சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதன் ஊடாக சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றியும் சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பில் அரசு கொண்டுள்ள கரிசனைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.

சாய்ந்தமருது 10ம் பிரிவின் கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸ்ரின் மற்று சாய்ந்தமருது 12ம் பிரிவின் கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.அஜ்கர் ஆகியோரும் கல்முனை பொலிஸ் நிலைய, குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் ரீ.நபார் மற்றும் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் மற்றும் திவிநேகும உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த இரண்டு பிரதேசங்களினதும் தெரிவு செய்யப்பட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பிரதேசத்துக்கான சிறுவர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :