மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகப் போட்டியிடுவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருப்பது அரசியலமைப்புக்கு அமைவானது.
அதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “18வது அரசியலமைப்பின் 129/1 சரத்தின் கீழ் உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரும் உரிமை ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது. இதற்கமையவே மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?, என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை அவர் கேட்டுள்ளார். அதனை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது” என்றுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment