பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா 11-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் கலந்து கொண்டார்.
இதன் போது மேற்படி பாடசாலையில் கல்வி கற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ,கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளில் திறமையான சித்திபெற்றவர்கள், மாகாண மட்ட மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்தவர்கள்; கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசும்,சான்றிதழும்,விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு கற்பித்த ஆசிரிய ,ஆசிரியைகளும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெவ்வை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்;களான ஏ.எஸ்.இஸ்;ஸதீன்,எம்.ரீ.எம்.அஷ்ரப்; உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,ஆசியரிய ஆசிரியர்கள், உலமாக்கள் ,புத்திஜீவிகள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment