ஏறாவூரிலிருந்து சவூதி அரேபியாவிலிருந்து வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் சிறையிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பியதாக அவரது கணவர் முஹம்மது கரீம் செய்யதலி தெரிவித்தார்.
ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையைச் சேர்ந்த இப்றாஹிம் இஸ்மாயில் ஹமீதா உம்மா (வயது 38) என்ற 05 பிள்ளைகளின் தாய் வறுமை காரணமாக தொழில்வாய்ப்பு தேடி கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக அவர் கடமையாற்றிய போதும் நீண்ட காலமாக சம்பளம் வழங்கப்படாமையால் வீட்டு எஜமானிக்கு தெரியாமல் வேறு வீடு மாறியுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் 6 மாத காலமாக சவூதி றியாத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் என்ன குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று இது வரையில் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அப் பெண்ணின் கணவர் கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமட், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் அப்பெண் பணியாற்றிய பழைய வீட்டு எஜமானுடன் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை தொடர்பு கொண்டு சிறையிலுள்ள பெண்ணை விடுவிப்பதற்கு கோரியதற்கு இணங்க அப் பெண் விடுதலையாகி இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment