மதஸ்தலங்கள் அபிவிருத்தி செய்வதில் இனவேறுபாடு, காட்டமுடியாது அமைச்சர் அதாஉல்லா



சலீம் றமீஸ்-

தஸ்தலங்கள் அபிவிருத்தி செய்வதில் இனவேறுபாடு, பிரதேச வேறுபாடு ,கட்சி வேறுபாடு காட்டமுடியாது. தேசிய காங்கிரஸைப் பொறுத்தவரையில் அதன் அதிகாரத்தினூடாக எந்த வேறுபாடின்றியும் மூவின மக்களுக்கும் பணி செய்து வருகின்றோம். இந்த வகையில் பஸரிச்சேனை ஜூம்ஆ பள்ளி அபிவிருத்திக்கு முடிந்தளவு உதவிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

பொத்துவில் - பசறிச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சரிடம் பசறிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் பள்ளிவாசல் நிர்மாணம் தொடர்பான குறைபாடுகளை முன்வைத்தனர். இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியுடன் இந்தப் பள்ளிவாசலின் நிர்மாணத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா உறுதியளித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில் பள்ளிவாசல்கள், கோயில்கள், பௌத்தவிகாரைகள், தேவாலயங்கள் போன்றவைகளின் அபிவிருத்தியில் தேசிய காங்கிரஸ் என்றுமே அரசியல் நடாத்துவதில்லை. எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினை இனங்கள் அல்லது கட்சி எனவும், வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள், பிரதேசம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதனை நன்கு திட்டமிட்டு நாங்கள் செய்து வருகின்றோம்.

எமக்கு கிடைத்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையுடனும் ஆலோசனை வழங்கி இருக்கின்றேன். அவருடைய அபிவிருத்தி பணியில் பொத்துவில் பிரதேசத்தையும், மூதூர் பிரதேசத்தையும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருக்கின்றேன். அவைகள் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.

நாங்கள் மக்களுக்கு தேவையான அபிவிருத்திப்பணிகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றபோது சில பிரதேச அரசியல் வாதிகளினால் தடுக்கப்படுவது கவலைக்குரியதாகும். அந்த மக்களுக்கும், பிரதேசங்களுக்கும் அவர்கள் பணி செய்வதுமில்லை, செய்கிறவர்களையும் அனுமதிப்பதுமில்லை. எது எவ்வாறாக இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களுக்கும் தேவையான அபிவிருத்திகளை சமனாக செய்து வருகின்றோம். இன்னும் தேவையான அபிவிருத்திகளை திட்டமிட்டு செய்யவுள்ளோம் எனவும் அமைச்சர் அதாஉல்லா மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர், சட்டத்தரனி பஹ்ஜி உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :