நிந்தவூரில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் பிரதம அதிதி பிரதி அமைச்சர் சரத் வீரசேகர




சுலைமான் றாபி-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சருமான கலாநிதி சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் ஆகியோர்கள் இன்று (30.08.2014) நிந்தவூரில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

 அவற்றில் சமூக பொருளாதார மறுமலர்ச்சி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைப் பரிசில், க.பொ.த(சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளில் சித்தியெய்திய மாணவர்களைக் கௌரவிக்கும்
சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்விலும், நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டார். 

இந்த இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணியினரை வீழ்த்தி சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி சம்பியனானது. இந்த இறுதிப் போட்டியில் முறையே முதலாம், இரண்டாம் இடங்ளைப் பெற்ற அணிக்கு மரத்தினால் செய்யப்பட்ட வெற்றிக்கிண்ணமும், பணப்பரிசும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :