ஹக்கீமை சந்தித்த அந்த அமைச்சர் யார் என்று விசாரிக்க பௌத்த பிக்குகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை



லேசியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பௌத்த பிக்குமார் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நாயக்க தேரர் உட்பட சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரவுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் கடந்த காலங்களில் புனித பூமி பிரதேசங்களில் உள்ள காணிகளை அந்நிய மதத்தினர் பயன்படுத்துவதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.

அந்த அமைச்சர் அந்நிய மத அடிப்படைவாதிகளிடம் பணத்தை பெற்று வருகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுப்பி வைக்கப்படும் கடிதம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிக்கு  கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :