2014ம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச மட்ட இணைப்புக்குழுக் கூட்டம் 22.04.2014 ஆந் திகதி (இன்று) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டப கேட்போர் கூட மண்டபத்தில் அதன் பிரதேச செயலாளர் திரு: வே.ஜெகதீசன் (SLAS) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாரை கச்சேரியின் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் : ஜனாப்.ஏ.எல்.இர்பான் , மற்றும் இப்பிரதேச செயலகத்தின் உதவிதிட்டமிடல் உத்தியோகத்தர், கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தரும், சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப்: எம்.என்.அமீன் அவர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், கிராம அபிவிருத்திச் சங்க பிரமுகர்களும், கிராம உத்தியோகத்தர்களும், விவசாய , கால்நடை, மீன்பிடி சங்கங்களின் உறுப்பினர்களும் மற்றும் இளைஞர்கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது தலைமையுரை வழங்கிய பிரதேச செயலாளர் அவர்கள் கூறுகையில் அனேக அமைப்புக்களை அழைத்திருந்தாலும் 09 அரசசார்பற்ற அமைப்புக்கள் இங்கு வந்துள்ளது. ஆனால் வருகை தாராத அமைப்புக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கபடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி இவ் ஒருங்கிணைப்புக் கூட்டமானது எமது எல்லோருடைய சேவைகளையும் பகிர்ந்து கொண்டு நல்லதொரு இணைப்பாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு தளமாகும் எனவும் கூறி தனது வரவேற்பையும் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் உரையாற்றிய இணைப்பாளர் ஜனாப்: ஏ.எல்.இர்பான் அவர்கள் கூறும்போது இவ் இணைப்புக் கூட்டமானது அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் அனைத்துவிதமான செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரே நிறுவனம் எல்லா செயற்பாடுகளையும் செய்யாமல் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுத்துவதற்கும் ஒரு வெளிப்பாட்டுத் தன்மைக்கும் ஏற்புடைய தளம் ஆகும்.

அது மட்டுமல்லாது மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எங்களுடைய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கடன் வழங்கும் பொழுது தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை மற்றும் தொழில் திட்டமிடல் பயிற்சிகளை வழங்கியவுடன் கடனுதவி செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பங்குபற்றிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களின் முதலாவது காலாண்டுக்கான தங்களது செயற்பாட்டு அறிக்கைகளை சமர்ப்பணம் செய்ததுடன் தங்களது கருத்துக்கள் பங்குபற்றியவர்களின் அபிப்பிராயங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் : என்.எம்.அமீன் அவர்களால் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகளை பகிர்ந்துகொண்டதோடு சிறப்பாக இக்கூட்டத்திற்கு உபசரணை ஒழுங்கமைப்புகளை வழங்கிய அம்பாரை மாவட்ட இணையம் மற்றும் மகாசக்தி நிறுவனத்துக்கும் இந்த வேளை நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.

_wm.jpg)

0 comments :
Post a Comment