அமைச்சர் ஹக்கீமும் ஞானசார தேரரும் தொலைக்காட்சி நாடகம் நடிக்கிறார்கள் - கபீர் ஹசீம்


ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் அலரி மாளிகையினால் உருவாக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று 24-03-2014 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸூக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது முற்றும் முழுதான நாடகமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டே அரசாங்கத்தின் மீது குறைக்கூறி வருகிறார்.

அதில் இரண்டு முக்கிய கதாபாத்திரமாக ரவுப் ஹக்கிமும், கலகொட ஞானசார தேரரும் நடிக்கின்றனர்.

ஞானசார தேரர் கூறுகிறார் இந்த அரசாங்கத்தை நாங்களே நிலைபெறச் செய்கிறோம் என்று கூறுகிறார்.

அதைப்போன்று அமைச்சர் ரவுப் ஹக்கிமும் எங்கள் வாக்கு பலம் இல்லாமல் இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல முடியாது என்று கூறுகிறார். அது உண்மைதான் பிரிவினைவாதிகளுடன் இணைந்து தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்யும் எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு இவர்கள் தயங்குவதில்லை.


தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களில் மாத்திரம் இருத் தரப்புக்கும் இடையில் இந்த முரண்பாடு ஏற்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்திற்கு சென்றார். உண்மையில் அவர் இருக்க வேண்டியது எதிர்க்கட்சியில் எனவும் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :