90 நாட்கள் தொடர்ந்து சபைக்கு சமூகளிக்காத கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நீக்கப்படவில்லை

பஹ்மியூஸூப்-

கிழக்குமாகாணசபை உறுப்பினர் திரு.தயாகமகே (ஐ.தே.கட்சி), ஜெமில் (முஸ்லிம் காங்கிரஸ்), பிரியந்தபத்திரன (சி.சு.கட்சி) ஆகிய மூன்றுஉறுப்பினர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக கிழக்குமாகாணசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் இம் மூன்றுஉறுப்பினர்களின் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகள் வறிதாக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாணசபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் கிழக்குமாகாணசபையின் கூட்டம்சென்ற 18 ம் திகதி நடைபெற்ற போது கிழக்குமாகாண சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி சார்பில் வீதிஅபிவிருத்திஅமைச்சரும்,அமைச்சரவைப் பேச்சாளருமானஎம்.எஸ்.உதுமாலெப்பைசபையில் விஷேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

கிழக்குமாகாணசபையின் உறுப்பினர்களானதிரு.தயாகமகே, ஏ.எம்.ஜெமில்,மு.P.பிரியந்தபிரேமகுமாரஆகியோர் கடைசியாகசபைக் கூட்டத்திற்குவருகைதந்துதங்களின் வரவைப் பதிவுசெய்ததினங்களில் இருந்து 90 நாட்கள் கடந்தநிலையில் அதற்கு இடைப்பட்டகாலத்தில் நடைபெற்றசபையின் எந்தவொருகூட்டத்திற்கும் சமூகம்அழிக்காமல்;. இருப்பதாகவும் அத்துடன் அவர்கள் மூவரும் தங்களது வராமைக்காக சபையின் முன் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை எனகிழக்குமாகாண சபை தவிசாளர் அறிவித்துள்ளார். 1987ம் ஆண்டு42ம் இலக்கமாகாண சபை சட்டத்தின்பிரிவு (2) உடன் கிழக்குமாகாணசபையின் செயன்முறைவிதிக்கோவைபந்தி (65) இனை சேர்த்துவாசிக்கப்படுவதன் பிரகாரம் இம் மூன்றுகிழக்குமாகாண சபை உறுப்பினர்களுக்கானஆசனங்கள் வறிதாக்கப்படுவதானஒருபிரகடனத்தைகிழக்குமாகாணசபையின் தவிசாளரின் பிரதிநிதியாக இச்சபைக்கு சமர்பிக்கின்றேன்.

இருப்பினும் நிதிக் கோட்பாட்டின்அடிப்படையில் இவ்வாறானபிரகடனம் ஒன்றைஏன் நிறைவேற்றக்க கூடாதுஎன்றநிலமைஉருவாகிஉள்ளதாலும், இம் மூன்றுஉறுப்பினர்கள் கிழக்குமாகாணசபையின் தவிசாளருக்கு 2014.03.08 ம் திகதியகடிதத்தில் வழங்கப்பட்டுள்ளவிளக்கங்களில் வலிதானகாரணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவேகிழக்குமாகாண சபை இது தொடர்பானஒருபிரகடனத்தைகுறித்தசட்டஏற்பாடுகளின் (29) பிரிவின் பிரகாரம் நிறைவேற்ற இச்சபைக்குமுன் மொழிகின்றேன். இம் மூன்றுஉறுப்பினர்களின் வறிதாக்கப்பட்டஉறுப்புரிமைதொடர்பாகவாக்கெடுப்புநடாத்தப்பட்டு இம் மூன்றுஉறுப்பினர்களும் தொடர்ந்துகிழக்குமாகாணசபையின் உறுப்பினர்களாகசெயல்படுவதற்குஏகமனதாகமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

இம் மூன்றுமாகாண சபை உறுப்பினரகள் தொடர்ச்சியாக 90 நாட்கள் கிழக்குமாகாணசபை கூடடங்களில் சமுககமளிக்காதுதொடர்பானவிளக்;கம் கேட்டுகிழக்குமாகாணசபையினால் அனுப்பபட்டகடிதங்களுக்குநியாமானகாரனங்கள் தெரிவித்துவிளக்ககடிதங்கள் அனுப்பியுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :