அகமட் எஸ். முகைடீன், ஏ.எல்.ஜனூவர்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்¸ இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள ஸ்ரீலங்கா யூத் 2 வது பாராளுமன்ற 7வது அமர்வு நாளை 22 மற்றும் 23ம் திகதிகளில் மு.ப 10.00 மணிக்கு மஹரகம ஸ்ரீலங்கா யூத் நிலையத்தில் ஆரம்பமாகும்.
இவ் அமர்வின் போது 'உலக இளைஞர் மாநாட்டில் வெளியிடப்பட்ட உலகமையமான அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள்¸ தற்கால இளைஞர் சந்ததிகளிடம் காணும் விதம்' என்ற தலைப்பில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள் 412 பேர் அடங்கிய ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற 7 வது அமர்வு இரண்டாவது நாளான 23ம் திகதி விஷேட அதிதியாக கௌரவ சுகாதார அமைச்சர் வருகை தருவதோடு' இங்கு அதிதி உரையும் இடம்பெறும்
இச்சந்தர்ப்பத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும' அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் மொஹான் லால் கிரேரு' அமைச்சின் செயலாளர் பி.விஜேரத்ன' தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரெரா ஆகியோர் கலந்துக்கொள்வர்.

0 comments :
Post a Comment