இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 730 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி 498 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான கௌசல் சில்வா(139), ஹிதுருவான் விதானகே(103) ஆகியோர் இன்று கன்னி ரெஸ்ட் சதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
முன்னதாக தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இன்றைய நாள் ஆட முடிவில் 2ம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்துள்ளது. இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெரும்என எதிர்பார்க்கப்படுகின்றது.



0 comments :
Post a Comment