தீபாவளியையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நாளை ஆரம்பம்.

சென்னை: தீபாவளியையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சனிக்கிழமை வருவதால், அக்டோபர் மாதம் 30, 31ஆம் தேதிகளில் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

முக்கியமாக, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற தென்மாவட்டங்களுக்கு கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். எனவே, ரயில்களில் நெரிசலை தவிர்ப்பதற்காக நாளை (28ஆம் தேதி) முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை தேதியிலிருந்து 120 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம் என்று விதி இருந்தது. இப்போது இந்த விதிகள் 60 நாள்களாகக் குறைக்கப்பட்டு இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பயணிகளிடையே பெருமளவு ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :