மகள் ஸ்ருதியைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் படித்துவிடுவேன் -கமல்ஹாசன்

மலஹாசன் தனது மகள் ஸ்ருதியைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் படித்துவிடுவாராம்.

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சரிகாவின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் பெற்றோர் வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார்.

நடிப்பில் மாத்திரமன்றி இசைத்துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

ஆனால் தற்போது பரபரப்பாக நடித்து வருவதால் இசைத்துறையில் அவ்வளவு ஆர்வம் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது.

ஸ்ருதி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் கப்பார் சிங் வெற்றிக்கு பிறகு ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

அதனால் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ராமைய்யா வஸ்தாவய்யா ஹிந்தி படமும், டி டேவும் அடுத்த மாதம் 19ம் திகதி வெளியாகவுள்ளது.

கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் மிகவும் பிசியாக உள்ளார் ஸ்ருதி. அதனால் அவர் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் இருக்கக் கூடாதா என்று கூட நினைக்கிறார்.

இவ்வாறு திரையுலகில் பரபரப்பாக வளர்ந்து வரும் தனது மகள் ஸ்ருதியை பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்து விடுவாராம் கமல் ஹாசன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :