விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மேலும் மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார்.
தற்போது இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே நகைச்சுவை மிக்க கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது.
நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார்.
0 comments :
Post a Comment