ரஜினியின் மருமகனாக இருப்பதால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை-தனுஷ்

டிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இவர் 2004-ம் ஆண்டு ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஆனந்த் இயக்கிய ‘ராஞ்ஜனா‘ ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.

இந்தநிலையில், நடிகர் தனுஷ் மும்பை சென்றுள்ளார். அங்கு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

ரஜினிகாந்தின் மருமகனாக இருப்பது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது உதவவோ இல்லை. நான் எனது வேலைகளை செய்கிறேன்.

இருபது இருபத்தைந்து படங்களில் நடித்தவனை, சினிமாவின் சின்னமாக இருக்கும் ரஜினியுடன் ஒப்பிடுவது அபத்தமானது. அவருடைய நடிப்பிலிருந்து எனது நடிப்பு முற்றிலும் மாறுபட்டது.

அவர் அவருடைய வேலைகளில் பிசியாக இருக்கிறார். நான் எனது வேலைகளில் பிசியாக இருக்கிறேன். இந்த படம் குறித்து நாங்கள் இதுவரை பேசிக் கொள்ளவில்லை.

நான் ஆனந்த்துடன் அடுத்த படம் பண்ணுகிறேன். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் இருவரும் ‘ராஞ்ஜனா‘ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் போது இன்னொரு படத்தில் வேலை செய்யலாம் என்ற கருத்து உருவானது.

இந்த புதிய படத்தை சிறிது காலம் கழித்து செய்வோம் என்று நினைத்தோம், ஆனால் ராஞ்ஜனா படத்தை முடிக்கும் போது மிக நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம். 

அதனால் இந்த படத்தை உடனே செய்ய ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :