அக்கரைபற்று கல்வி வலய ஆசிரியர் கிரிகட் அணியின் ஏற்பாட்டில் கிரிகட் சுற்றுப் போட்டி.



(சலீம் றமீஸ்)

அக்கரைபற்று கல்வி வலய ஆசிரியர் கிரிகட் அணியின் ஏற்பாட்டில் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான அணிக்கு ஆறு பேர் கொண்ட ஐந்து ஓவர் மட்டுப் படுத்தப்பட்ட மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் நடைபெற்றது.

அக்கரைபற்று கல்வி வலய ஆசிரியர் கிரிகட் அணியின் தலைவர் எம்.கே.ஹமாமுதீன் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தவிசாளருமான யு.எல்.எம்.ஸர்ஜூன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இறுதி சுற்றுப்போட்டியில் அக்கரைபற்று ஹாட் என் சொப்ட் அணியினரும் அட்டாளைச்சேனை பைனா அணியினரும் கலந்து கொண்டு அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

 வெற்றி பெற்ற கழகத்திற்கான சம்பியன் கிண்ணத்தை பிரதம அதிதி அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் யு.எல்.எம்.ஸர்ஜூன் வழங்கி வைத்தார்.

இரண்டாம் இடத்தினை பெற்ற அக்கரைபற்று ஹாட் என் சொப்ட் அணியினருக்கான கிண்ணத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் வழங்கிவைத்தார். 

விளையாட்டுத்துறைக்காக தன்னை அர்ப்பணித்த ஹமாம் அதிபருக்கு நிணைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :