பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்றிரவு வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டதன் பின்னரே அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் .பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸார் ஏற்கனவே குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment