(எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 63வது வருடாந்த பொதுக்கூட்டமும்,
பரிசளிப்பு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷீல்
ராஜபக்ஸ சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் கலந்துகொண்டு
சிறப்பித்தார்.பிரதம அதிதி கலந்துகொண்டு சிறிது உரையாற்றாமல் சென்றமை
முழுமையாக முஸ்லிம்களை மட்டும்கொண்டுள்ள இப்பேரவையினரையும் அங்கு
வந்திருந்த ஊடகவியலாளர்கள், புதிதி ஜீவிகளையும் பெரும் ஏமாற்றத்திற்கு
கொண்டு சென்றதாக சம்பவ இடத்தில் பலரும் அங்கலாய்த்தனர்.
அதுபோல் கௌரவ அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்ணான்டோ அவர்களும்
விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும்
மற்றும் பேரவையின் மகளிர் அணியினுடைய அங்கத்தவர்கள் அகில இலங்கை
ரீதியிலுள்ள அங்கத்துவ வை.எம்.எம். ஏக்களின் உறுப்பினர்களும்
கலந்துகொண்டனர்.
இதன்போது சிறப்பாக தொழிற்பட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ.களுக்கு பிரதம
அதிதியால் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வில் பேரவையின் நடப்பு வருடத்திற்கான புதிய
அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது.
இதன்படி தேசியத்தலைவராக கே.என். டீன், தேசிய பொதுச்செயலாளராக ராஸ்மரா
ஆப்தீன், தேசிய பொதுப்பொருளாளராக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.
நபீல் ஆகியோரும் தெரிவானார்கள்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏ.எம். நபீல் தேசிய பொருளாளராக
தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரை கௌரவிக்கும் வகையில் அகில
இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.உதுமாலெப்பை பொன்னாடை பேர்த்தி கௌரவித்தார்.




0 comments :
Post a Comment