அமெரிக்காவில் உள்ள 10 வயது சிறுமி Sarah Murnaghan என்ற சிறுமிக்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவெடுத்தனர். சிறுமி சாராவுக்கு 30 வயதுக்கு மேற்பட்ட நபரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டது. ஆனால் இதை அவளுக்கு பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அமெரிக்க சட்டப்படி சிறுவர்களுக்கு பெரியவர்களின் உடல் உறுப்புகள் பொருத்தக் கூடாது. அவ்வாறு பொருத்துவதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
சிறுமியின் உயிரை காப்பாற்ற அமெரிக்க அரசு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என சுமார் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து சாராவின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஆய்வு செய்த நீதிமன்றம் சிறுமியின் உயிரை காப்பாற்ற மாற்று நுரையீரல் சத்திரசிகிச்சைக்கு அனுமதி வழங்கியது.சிறுமி சாராவுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மூலம் நுரையீரலை மாற்றி அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.jpg)
0 comments :
Post a Comment