இந்த நாட்டில் மூன்று தசாப்தங்கள் இரத்த ஆறு ஓடியதைப் போன்று முஸ்லிம்களையும் வலிந்து சண்டைக்கு இழுக்கிறது பொதுபல சேனா -தவம் MPC

(எஸ்.அன்சப் இலாஹி)

சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் ஆயுதப்
 போராட்டத்தைத் தொடங்கிய போதுஇ முஸ்லிம் இளைஞர்களும் அதே வழியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கினார் என்கின்ற வரலாற்றை மறந்து விட்டு பொதுபலசேனா பேசுவது கண்டனத்திற்குரிய விடயமாகும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

சமகால நிகழ்வுகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒன்றுகூடல் நேற்று புதன்கிழமை மருதமுனையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு அவர் கூறினார். மேலும் அவர் அங்கு கூறுகையில்

முஸ்லிம்கள் பௌத்த மதத்தை ஒரு நாளும் இழிவுபடுத்தவில்லை. இஸ்லாம் மற்ற மதங்களை கண்ணியப்படுத்துவதையே முஸ்லிம்களுக்குப் போதிக்கிறது.

 அப்படிப்பட்ட உயரிய மார்க்கத்தை இழிவு படுத்துவதை வெறும் அரசியலுக்காகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மார்க்கமா? அரசியலாஇ என்ற சூழ்நிலை வந்தால்இ எல்லாப்பதவிகளையும் திறந்து விட்டு மக்களோடு மக்களாக வீதியில் இறங்குவதற்கும் தயங்கமாட்டோம். இதுவரை நாம் பொறுமை காத்துவருவது வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிறு சிறு கிராமங்களில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுடைய பாதுகாப்பையும் இருப்பையும் கவனத்தில் கொண்டுதான். இதனை புரிந்து கொள்ளாது தொடர்ச்சியான நெருக்குவாரங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய போதுஇ முஸ்லிம் இளைஞர்களும் அதே வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கினார் என்பதை மறந்துவிட்டு பொதுபல சேனா பேசுவது கண்டனத்திற்குரியது. 

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்து எறியப்படுவதற்கும்இ இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது பஸ்களை எரித்து எதிர்ப்புத் தெரிவித்ததற்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புகளே காரணமாக அமைந்திருந்தன. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் 30,000 இராணுவ வீரர்களை இழந்துஇ 20,000 இராணுவத்தினர் அங்கவீனமுற்றுஇ 10,000 சிங்கள மக்களும்இ தலைவர்களும் இழந்ததற்குப்பின்னரும் பௌத்த மதத்தின் பேரால் அராஜகம் புரிவதை பொதுபல சேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகள் படிப்பினை பெறவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். 

அடிப்படையில் தமிழர்களின் ராஜ்ஜியங்கள் இருக்கவில்லை தமிழர்கள் இந் நாட்டின் சாதாரண குடிமக்களே தவிர இன்னும் ஒரு தேசமாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை எனக்கூறி இந்த நாட்டில் மூன்று தசாப்தங்கள் இரத்த ஆறு ஓடியதைப் போன்று முஸ்லிம்களையும் வலிந்து சண்டைக்கு இழுக்கும் தந்திரோபாயத்தை பொதுபல சேனாவின் பின்னணியில் இருந்து சில அரசியல்வாதிகள் தொடங்கியிருக்கிறார்கள். இதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

நமது மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் முஸ்லிம்களுக்கு ஆயுதம் கொண்டு வந்ததாகவும்இ அந்த ஆயுதங்கள் எங்கே என்றும் பொதுபலசேனா கேள்வி கேட்கிறது. அஷ்ரப்பின் முற்போக்கு சித்தனைகளை தெரிந்து கொள்ளாமையினாலேயே இவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்.

 அஷ்ரப் இந்த நாட்டில் வாழும் மூன்று சமூகங்களையும் ஒன்றிணைக்க நினைத்த கடந்த நூற்றாண்டின் உன்னத முஸ்லிம் தலைவராகும். இலங்கையில் வாழும் மக்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் என்று பிரித்து வாழாமல் இலங்கையர் என்கின்ற பொதுப் பண்பியல்பில் வாழும் போதுதான் உண்மையான சமாதானம் இந்த நாட்டில் பிறக்கும் என்பதனை முன்னுணர்ந்த தேசிய ஐக்கிய முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தை உருவாக்கி அதில் மூவினத்தையும் இணைத்துக் காட்டிய உன்னத தலைவர்.

 சிறுபான்மை இன தலைவராக இருந்த போதிலும் இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு 2000 ஆம் ஆண்டில் யாப்புச் சீர்திருத்தத்திற்கான முன் மொழிவை பாராளுமன்றத்தில் முன்வைத்த பெருந்தலைவர். இந்த வரலாற்றை பொதுபலசேனாவினர் தேடித் தெரிந்து கொள்ளவேண்டும்.

சுதந்திரமாகப் போராடுகின்ற போது மாக்கான் மாக்கார் அறிஞர் சித்திலெவ்வை சுதந்திரத்திற்குப் பின்னரான யுத்த காலத்தில் அஷ்ரப் ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் என்று இந் நாட்டிற்காக முஸ்லிம்கள் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிவரும் பங்களிப்பினை பொதுபலசேனா அமைப்பினர் குழி தோண்டி மூடி மறைக்கப்பார்க்கிறார்கள். புதிய வரலாற்றைப் புனைந்து இலங்கையில் ஏக இனக் கொள்ளையை புகுத்தப்பார்க்கிறார்கள்.

 உலகம் வளர்ந்து நாடுகள் சேர்கின்றன. இனங்கள் கலந்து புதிய தலைமுறைகள் உருவாகின்றன. இவற்றை பொதுபல சேனா தெரிந்து கொள்ள வேண்டும்.

 பின் நவீனத்துவ சிந்தனைகள் பற்றிய அறிவையும் தொழில்நுட்ப அபிவிருத்தி பற்றிய கனவையும் சுமந்து உலகம் ஓடிக்கொண்டிருக்கின்ற போது இன்னும் மதவாத சகிப்புத்தன்மையற்று மத போதையில் மயங்கிக் கிடக்கும் இலங்கையை உருவாக்க இவர்கள் முனைவது இந்த நூற்றாண்டின் அறியாமைச் சமூகம் இந்த நாட்டில்தான் இருக்கிறது என்பதைத்தான் எம்மால் உணர முடிகிறது என்றும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :