பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவமானது பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாடு - கி.மா.அமைச்சர் உதுமாலெப்பை


வெள்ளத்தில் அமிழ்ந்திருந்த அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவமானது பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாடு என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்
அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீதான தாக்ககுதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீதான தாக்ககுதல்களை மேற்கொண்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட  வேண்டும்.

அண்மைக்காலமாக இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. அவற்றை நிருபிக்கும் சம்பவங்களே அதிகளவில் நடந்து வருகின்றன. இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சகல இன மக்களுடனும் புரிந்துணர்வுடனே வாழ விரும்புகின்றனா.; வாழ்ந்தும் காட்டியுள்ளனர். பேரினவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவோர்; இலங்கையின் வரலாற்றை சற்றுப் பினனோக்கிப் நோக்குவார்களேயானால் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒற்றுமைக்கும் முஸ்லிம்கள்  எத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.


இந்நாடு ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இந்நாட்டில் வாழுக்கின்ற அனைவரும் தங்களுக்குரிய உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள். இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பேரினவாதக் குழுக்களைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன்  நிறுத்தப்பட வேண்டும்

உலகிலேயே சக்தி மிக்க இயக்கமாக விளங்கிய விடுதலைப் புளிகளை அழித்தொழித்த அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களின் மனங்களைப் புன்படுத்தும் ஈனச் செயற்பாடுகளை மேற்கொள்ளும், நாட்டின் அமைதிக்கும் இன ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் பேரினவாத சிறு குழுக்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் அழிக்க முடியாமலும் கட்டுப்படுத்த முடியாமலும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

முஸ்லிம்களின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் தூண்டி இந்நாட்டில் மீண்டுமொரு அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிக்க ஒரு சில பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றன.  முஸ்லிம்களுக்கும் அவர்களின் மார்க்க விடங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் இந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தாது இருக்க உரிய நடவடிக்கை  எடுக்கப்படுவது அவசியமாகும். பள்ளிவாசல்களும் கோயில்களும் தேவாலயங்களும் இப்பேரினவாதிகளுக்கு என்ன செய்கிறது. மத வழிபாட்டுத் தளங்கள் மக்களை நல்வழிப்படுத்தும் கேந்திரத்தளங்களாகும். இத்தளங்களை அழித்தொழிப்பதன் ஊடாக அவர்கள் எதை அடையப்போகிறார்கள்.
படித்தவுடன் கீழே"Like" Button னை கிளிக் செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :