ஒன்றரை வயது குழந்தையை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த தந்தை (வீடியோ)

Share on

அமெரிக்காவைச் சேர்ந்த William Todd Lewallen என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை நாய் கூண்டில் அடைத்து வைத்ததால் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் அமெரிக்காவின், ஒக்லாஹாமா நகரில் குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இவரது 4 வயது மகன் வீட்டிற்கு வெளியில் நின்று அழுது கொண்டிருந்தான்.
பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது இந்தச் சிறுவனின் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வெளியே இந்தச் சிறுவன் அழுது கொண்டிருக்க, ஒன்றரை வயது குழந்தை நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் தற்போது கடுங்குளிர் காணப்படுகிறது. இந்த குளிரில், குழந்தைகள் வீட்டுக்கு வெளியே மேலாடை இல்லாமல் தவிக்கப்பட்டதை பார்த்த பக்கத்து வீட்டினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து பார்த்த போது, இந்தக் குழந்தைகளின் தந்தை மது அருந்திவிட்டு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு குழந்தை தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தது.
இந்தக் குழந்தைகளின் தாய் வேலைக்கு சென்றிருந்தார். தனது குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்காததாலும், ஒன்றரை வயது குழந்தை நாய்க்கூண்டில் அடைத்ததற்காகவும் இக்குழந்தையின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :