Share on

(காத்தன்குடி செய்தியாளர்.)
சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமாகும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் யுனிசப் நிறுவனத்தின் அனுசரணைடன் நடைபெற்ற நீர்; மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றம் போதே காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் பெண்கள் அபிவிருத்தியின் பங்காளிகளாக இருக்க வேண்டும். பெண்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு பட்ட அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பெண்கள் பங்கெடுப்பதுடன் ஒழுக்க கலாசார விழுமியங்களுக்குட்பட்டு செயற்படுவது முக்கியமானாதாகும்.
வீடுகளில் பெண்கள் சகோதரிகள் குடும்ப சுகாதாரத்திலும் வீட்டு சுகாதாரத்திலும் கரிசனை செலுத்துவதன் மூலமே கொடிய நோய்கலில் இருந்து பாதுகாப்பு பெறமுடியம்.
பெண்கள் ஒதுங்கி இருந்த காலம் மலையேறி இன்று பெண்கள் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
இன்று டெங்கு போன்ற கொடிய நோய்கள் நம்மிடையே காணப்படுகின்றன. இவ்வாறான நோய்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால் சுகாதார பழக்க வளக்கங்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். நமது சுற்றப்புறச் சூழலை நாம் துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் இவ்வாறான கொடிய நோய்களில் இருந்தும் தொற்று நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மாரி மழைகாலம் தொடங்குவதால் டெங்பு நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. இதை தடு;ப்பதற்கு நாம் நமது சூழலை துப்பரவாக வைத்திருப்பதுடன் நாமும் சுத்தமாகவும் துப்பரவாகவும் இருக்க வேண்டும்.
இன்று அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்nதிரான வன்முறைகள் போன்றவைகள் பெரும் சவாலாக உள்ளன. இவைகளில் இருந்து நமது சிறுவாகளையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும். என சல்மா ஹம்சா மேலும் தெரிவித்தாh.

0 comments :
Post a Comment