உள்ளூராட்சி மன்றங்கள்10 தரமுயர்கின்றன



செயற்பாட்டில் இருக்கும் 7 நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றவும் 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்ச்ரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனமதி வழங்கியுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று  (8) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டில் தற்போது 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.

அதற்கமைய 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், அந்தந்த காலப்பகுதிகளில் குறித்த பிரதேசங்களில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் , மக்களின் தேவைப்பாடுகள் அதிகரிப்பு என்பவற்றை ஆராய்ந்து குழுவொன்றினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு, களுத்துறை, வவுனியா, புத்தளம், மன்னார், கேகாலை, அம்பாறை, திருகோணமலை ஆகிய நகர சபைகளை மாநகர சபைகளாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச்சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களின் 10 பிரதான நகரங்களில் மாநகர சபை அல்லது நகர சபையாக தரமுயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :