நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி! தென்கிழக்குப் பல்கலைக்கழகச் சாரதிகளுக்கு தரமான சீருடைத் துணி வழங்கல்



ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கூட்டு முயற்சிக்கு சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மனமார்ந்த நன்றி
தென்கிழக்குப் பல்கலைக்கழகச் சாரதிகளின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பணக் கொடுப்பனவுக்குப் பதிலாகத் தரமான சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

1995ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், பழைய சுற்றறிக்கைக்கு அமைவாகச் சீருடைக்கான பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த 15 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த இக்கொடுப்பனவுத் தொகை, தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தினால், பணத்திற்குப் பதிலாகத் தரமான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாரதிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே சீருடைத் துணி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஏனைய ஊழியர்களுக்குப் பழைய சுற்றறிக்கையின் அடிப்படையில் பணக் கொடுப்பனவே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சாரதிகளின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகத் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்னெடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.

இக்கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சான்றாதாரங்களைச் சேகரித்து, ஏனைய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படும் சீருடை வழங்கும் நடைமுறைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டிச் சமர்ப்பித்த சாரதிகளின் பிரதிநிதிகளான நுவான் மற்றும் அமீன் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.

அதேபோன்று, சீருடை வழங்குவதற்கான நிர்வாக நடைமுறைகளைச் சீரமைத்து, இம்முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்த ஊழியர் சங்கத்தின் தலைவர், செயலாளர், நிர்வாகக் குழுவினர், Hazeer MA மற்றும் Ramnaz MA ஆகியோருக்கும் சாரதிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீண்ட தேடலுக்குப் பின்னர் ஊழியர்களுக்குப் பொருத்தமான தரமான சீருடைத் துணியைத் தெரிவுசெய்து வழங்குவதில் பங்களித்த Iqpal P O அவர்களுக்கும், எவ்வித சிரமத்தையும் பொருட்படுத்தாமல் சீருடைகளை ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் உதவிய Hilmy Atham அவர்களுக்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இச்சீருடை வழங்கும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய உபவேந்தர், பதில் பதிவாளர், நிதியாளர் மற்றும் பல்கலைக்கழகப் பேரவை (University Council) உறுப்பினர்கள் அனைவருக்கும் சாரதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊழியர்கள் தமது நன்றியையும் பாராட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய முறையில் முன்வைத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர் சங்கமும் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து செயற்படும்போது, ஊழியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தச் சீருடை வழங்கும் நடவடிக்கை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகச் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :