சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி முகாம் - 2025



நூருல் ஹுதா உமர்-
ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான குழு விளையாட்டு மற்றும் படைப்பு திறன்களை வளர்த்து அதன் மூலம் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுடன் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதை பொருளை திசை திருப்பும் முறைகள், நவீன இளைஞர் யார்? போன்ற தலைப்புகளில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யு. சுசந்த அவர்கள் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எ. முபாரக் அலி, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எம் சிறிவர்த்தன, சாய்ந்தமருது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எ. தல்சுரூன், போதைப்பொருள் முத்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.எல். றிஸ்வானா, பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எ.ஜி. அன்வர், மற்றும் ஆலையடிவேம்பு இளைஞர் சேவை அதிகாரி என். ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களுக்கு “சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :