இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் விசேட நினைவேந்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று (டிசம்பர் 26) மிகச் சிறப்பாக நடைபெற்றன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் உயிரிழந்த உறவுகளையும், ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து இன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வின் சிறப்பம்சங்களாக உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து அனர்த்த இடர் குறைப்பு மற்றும் முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. குறிப்பாக 2004 சுனாமி மற்றும் அண்மைய 'டிட்வா' (Ditwah) சூறாவளி பாதிப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இயற்கை அனர்த்தங்களில் இருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்கவும், அதற்கான தயார்நிலையை உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment