சம்பியன் கிண்ணம் பவர் பிளயர் லெஜண்ட் 96 வசமானது.!



யூ.கே. காலித்தீன்-

ல்முனை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்ற 46 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "Zahiriyan   Legend Primer League" - 2025 (ZLPL),  கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் சம்பியன் கிண்ணம் லெஜண்ட் 96 வசமானது.

லெஜண்ட் 95 அணியின் ஏற்பாட்டில் அவ்வணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.எம். றிப்தி தலைமையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்ற இந்த "Zahiriyan  Legend Primer League" - 2025 (ZLPL) இன் இறுதி நாள் ஆட்டம் கடந்த (20) மாலை லெஜண்ட் 95 அணியை எதிர்த்து லெஜண்ட் 96 அணியினர் விளையடினர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லெஜண்ட் 96 அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய லெஜண்ட் 95 அணியினர் நிர்ணயித்த 10ஓவர்கள் முடிவில் 08விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றனர்.

லேஜன்ட் 95 அணி சார்பாக ஏ.எல்.எம்.தன்சில் 16பந்துகளுக்கு 23ஓட்டங்களையும்,  ஏ.எம். முபாறக் 15பந்துகளுக்கு 19ஓட்டங்களையும், பந்துவீச்சில் லெஜண்ட் 96 அணி சார்பாக எம்.எச்.எம். தாரிக் 02ஓவர்கள் வீசி 12ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களையும் ஏ.எம்.நஜாத்,  ஏ.எம்.எம். நசீர்கான் தலா 01 விக்கட்டுனையும் கைப்பற்றியிருந்தனர்.  

பதிலுக்கு 74 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லெஜண்ட் 96 அணியினர் 9.4ஓவர்கள் முடிவில் 04விக்கட்டுக்களை இழந்து  74ஓட்டங்களை பெற்று 06 விக்கட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்தனர்.

லேஜண்ட் 96 அணி சார்பாக ஏ.எஸ்.எம்.நஜாக்கத்  24பந்துகளுக்கு 27ஓட்டங்களையும், எம்.எச்.எம். தாரிக் 12பந்துகளுக்கு ஆட்டமிளக்காமல் 19ஓட்டங்களையும் பெற்றனர்,  பந்துவீச்சில் லெஜண்ட் 95 அணி சார்பாக எம்.எம். ஹ_சைன், எம். முர்சி;த், ஏ.சி.நிஸாம் தலா 02ஓவர்கள் வீசி தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் லெஜண்ட் 96 அணி வெற்றியை பதிவு செய்து இரண்டாவது முறையாகவும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக 19ஓட்டங்களையும்> 04விக்கட்டுக்களையும் கைப்பற்றிய எம்.எச்.எம். தாரிக் தெரிவானதோடு இச்சுற்று தொடரின் தொடராட்டகாரராகவும் தெரிவு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இச்சுற்றுப் போட்டி தொடரில் லெஜண்ட்90, லெஜ்ண்ட்91, லெஜண்ட்92, லெஜண்ட்93, லெஜண்ட்94, லெஜண்ட்95, லெஜண்ட்97 மற்றும்  Bee 95  உட்பட மொத்தம் 09 அணிகள் பங்குபற்றின.

இத் தொடரானது வயதடிப்படையில் மூன்று குழுக்கலாக பிரிக்கப்பட்டு சுற்றுத் தொடரில் பங்கு பற்றும் 09 லெஜண்ட் அணிகளும் முறையே ஏ. பிரிவில் லெஜண்ட் 90> 91> 92வும் வி. பிரிவில் லெஜன்ட் 93> 94> 95வும் சி. பிரிவில் Bee 95> 96> 97 ஆகிய அணிகளாக பிரிக்கபட்டு கடந்த 19ம்> 20ம்; ஆகிய திகதிகளில் போட்டி நடைபெற்று கடந்த ஞாயிறு (20) மாலை கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றன.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக அரசியலமைப்பு  பேரவை உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணிக்கு பதக்கங்களையும் வெற்றிக் கேடயத்தையும் வழங்கிவைத்தார்.

கௌரவ அதிதியாக கல்லுரியின் முதல்வர் எம்.ஐ.எம். ஜாபீர் கலந்து கொண்டதோடு அனுசரனையாளர்களும் கலந்து சிறப்பித்து பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :