சிரேஷ்ட உதவி நூலகர் ஏ.எம். நஹ்பீஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதல்களையும் வழங்கிவைத்தார்.
இங்கு உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் ஜுனைடீன், இலங்கை அரசின் டிஜிட்டல் மாற்றக் கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் “நவீன நூலக சூழல்களில் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புதுமையான வாடிக்கையாளர் சேவை நடைமுறைகளை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறை; இலங்கை அரசாங்கத்தின் “தேசிய டிஜிட்டல் மாற்றக் கொள்கை” மற்றும் “டிஜிட்டல் பொருளாதாரம்” குறித்த முக்கிய முயற்சிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்படுகிறது.
அரசு மற்றும் தனியார் துறைகளின் செயல்திறனையும், விளைவுத்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், நவீன டிஜிட்டல் கருவிகள், தளங்கள் மற்றும் செயல்முறைகளை கொண்டு நிர்வாகச் செயல்களை எளிமைப்படுத்தி, நூலக சேவைகளை மேம்படுத்தும் ஒரு முன்னேற்றமான வழியாக இத்திட்டம் அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும் .டிஜிட்டல் உட்பிரவேசம், தொழில்நுட்ப திறன், மற்றும் புதுமைமிக்க சமூகத்தை உருவாக்கும் தேசிய இலக்குகளுக்குச் சிறந்த பங்களிப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பயிற்சி நெறியில், நூலகர்களுக்கான தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய வாடிக்கையாளர் சேவை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான ஒரு முக்கிய தளமாக அமைந்தது. இதில் KOHA ஒருங்கிணைந்த நூலக முகாமைத்துவ அமைப்பு, VuFind, DSpace, திறந்த அணுகல் கல்வி வளங்கள் (OERs), மெட்டாடேட்டா மற்றும் பொருள் பட்டியலிடல் ஆகிய தலைப்புகள் விரிவாகக் கையாளப்பட்டன.
பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.நிஜாம் மற்றும் திட்ட முகாமையாளரும் சிரேஷ்ட உதவி பதிவாளருமான எம்.எச். நபார் ஆகியோரது பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலகர் எம்.எம். றிபாவுடீன் வரவேற்புரை நிகழ்த்தினார். உபவேந்தர் முன்னிலையில் புதிய டிஜிட்டல் தளத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் VuFind – (Villanova University, USA) நிறுவனத்தின் ஸ்தாபகர் Demian Katz வின் சிறப்பு வீடியோ செய்தியும் ஒளிபரப்பப்பட்டது. இங்கு VuFind திட்ட செயலாளர் – HealthNet Nepal பேராசிரியர் மோகன் ராஜ் பிரதான் புதிய கருவியை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்வை நடாத்திய வளவாளர்களுக்கு பங்குபற்றுனர்களால் நினைவு பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
வளவாளர் சந்திரா புஷண் யாதவ், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் அஹமட் சர்ஜூன் றாசிக், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.வை.எம். சுஹீரா, சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சி.எம். அஸ்வர், சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம். சஜீர், உதவி இணைய முகாமையாளர் எம்.ஜெ.ஏ. சாஜித், நூலக சிரேஷ்ட உத்தியோகத்தர் சி.எம். முனாஸ் ஆகியோரும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டோரும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment