குறித்த கலந்துரையாடலின்போது புதிதாக குடியேறிய மற்றும் அந்த பிரதேசங்களில் வளவுகளை கொள்வனவு செய்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அல்ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறினார்.
இவர்களது தேவைகளை உணர்ந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர்களால் கோரப்பட்ட வீதி புனரமைப்பு மற்றும் சிறிய பாலம் அமைத்தல் போன்ற விடயங்களை உடன் செய்துதருவதாக வாக்குறுதியளித்ததுடன் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு தொலைபேசியூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருக்கு பணிப்புரைகளையும் விடுத்தார். கடந்த மாதம் அல் அமானா நற்பணி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட பாதை அபிவிருத்தி வேலைகளின் ஆரம்ப படிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வார முடிவில் வீதி புனரமைப்பு வேலைகள் தொடங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல் அமானா நற்பணி மன்றத்தினருக்கு உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் போது உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான நூறுல் ஹுதா உமர் மற்றும் அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முபாறக், பொருளாளர் ஏ.சி.எம். பளீல் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment