அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கல்முனை வர்த்தக சங்கத்தினால் பாராட்டு



சர்ஜுன் லாபீர்-
ம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அண்மையில் புதிதாக பதவியேற்ற
ஜே.எம் ஏ டக்லஸ் அவர்களை கல்முனை வர்த்தக சங்கத்தினர் நேற்று(15)பாராட்டி கெளரவித்தனர்.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்ற Moon Gloaming ஒன்று கூடல் நிகழ்வின் போது இக் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்லஸ் அவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் நினைவுச் சின்னம்,பொன்னாடை ஆகியன வழங்கப்பட்டு மிக விமரிசையான முறையில் இக் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இக் கெளரவிப்பு நிகழ்வானது கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை வர்த்தக சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ்.எம் ஜின்னா, பொருளாளர் பி.எம் ஜலீல், செயலாளர் எஸ்.எல் ஹமீட் உப பொருளாளர் யூ.எல் பைசால் ஆகியோர் கலந்து கொண்டு கெளரவித்தனர்.

அதேவேளை இந் நிகழ்வில் கல்முனை மாநகர மார்கட் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

கல்முனை வர்த்தக சங்கத்தினர் பொது சேவைகள், சமூக நல விடயங்கள் மற்றும் இடர் அனர்த்த உதவிகள் என பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :