தேர்தலொன்று வரும் போது ஆளும் கட்சியின் நிலையினை புரிந்து கொள்ள முடியும்-எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச !



எம்.என்.எம்.அப்ராஸ் , ஏ.பி.எம்.அஸ்ஹர்-
ன்று நாட் டை ஆளும் அரசாங்கத்திடம் எதிர்கால திட்டம் இல்லை நாம் திட்டமிட் டு ஏதிர் கால வேலைத்திட்ட தை முன்னெடுத்து வருகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "ஜன சுவய" சமூக நலத்திட்டத்தின் ஊடாக,45 வது வைத்தியசாலையாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது .

கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் அப்துல் ராசாக் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (16)விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இ.முரளிஸ்வரனிடம் மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் இங்கு உரையாற்றுகையில் ,

இலங்கையின் வரலாற்றை எடுத்து கொண்டால் இலங்கை வரலாற்றில் வித்தி யாசமான நிகழ்வுகள் இடம்பெற்று உள்ளன கம்முதாவ, மஹாபொல , ஜனசவிய போன்ற இப்படி யான உன்னதமான நிகழ்வை ஆரமித்த இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து உள்ளார்கள் அது என்னவென்றால் இந்தியாவிடமிருந்து கடனுக்காக நாட்டுக்கு எண்ணெய் வழங்க கப்பல் ஒன்று வருகை தந்தது இதனை வரவேற்க பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளார்கள் கடனுக்காக ஒரு நிகழ்வினை செய்துள்ளார்கள் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அன்று நான் மலையக மக்க்களுக்கு வீடு கட்டுவதற்கு நான் இந்திய பிரதமரிடம் எனது
வேண்டுகோளுக்கு இணங்க கடன் தொகையினை எமக்கு வழங்கி இருந்தார்கள் அச் சந்தர்ப்பத்தில் அன்று அடி மட்ட முட்டாள்கள் சிலர் கறுப்பு கொடியினை இடும் படி தெரிவித்தார்கள் அப்பாவி மக்களுக்கு ஏழை மக்களுக்கு கடன் பெற்று வீடுகள் திறக்கும் போது எம்மை நோக்கி கறுப்பு கொடியினை இடும் படி அன்று கூரியவர்கள் இன்று கடனை பெற மகிழ்ச்சியுடன் நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றனர்.

இவர்களை போல இந்த கேலிக்குத்தான எம் பிக்களும் அமைச்சர்கள் எந்த நாட்டில் தான் உள்ளார்கள் என இதன் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்
நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் ஒரு போதும் எண்ணெய் விலை குறைய போவதில்லை நாடு பாதளத்துக்குள் சென்று கொண்டுள்ளது அரசாங்கத்திடம் எவ் வித திட்ட்ங்களும் இல்லாமல் நாட்டு மக்க்களின் மீதே சுமைகள் சுமத்தப்படுகிறது
விலை உயர்வுக்கு ஆர்ப்பட்ட்ம் நடத்துவோர் மீது தடியடி பிரயோகம் செய்ய வேண்டுமெனஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர் இப்படியான் ஆட்சி முறை எங்கு உள்ளது ? இவர்களிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஒரு தேர்தல் ஒன்று வரும் பொது உங்கள் நிலையினை புரிந்து கொள்ள முடியும் மக்கள் புள்ளடி
மூலம் உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .

எதிர்க்கட்சி ஏன்றால் ஆட்சியை பிடிக்க தான் இருபப்பார்கள் எதிர்க்கட்சி வரலாற்றில் நாங்கள் மக்களின் தேவையை உணர்ந்து மக்களுக்கும் நாம் சேவைகளை செய்து கொண்டு வருகிறோம் .
நாம் இவ்வாறான நல்ல வேலை செய்யும் போது சில அரசியல்வாதிகள் எதிர்ப்பினை தெரிவிக் கின்றனர் அதையும் தாண்டி நாம் மக்களுக்கும் தேவையான பொறுப்பு மிக்க வேலை திட்ட த் தினை மேற் கொண்டு வருகின்றோம்

சஜித் பிரமதாசவினால் வைத்திய உபகரணங்கள் மட்டுமே வழங்க தெரியும் என சில அரசியல்வாதிகள் பிழையாக விமர்சனம் செய்கின்றனர் சிந்தித்து பாருங்கள் வைத்திசாலைக்கு இப்படியான வைத்திய உபகாரணங்கள் வழங்கி அதன் மூலம் உயிர் காக்கும் திட்டத்தினை ஏளனமாக பார்க்கிறார்கள் இப்படியானவர்களை பார்த்தால் மிகவும் வெட்கமாக உள்ளது முடிந்தால் அவர்களிடம் தெரிவிக்கிறேன் இப்படியான மக்கள் உயிர் காக்கும் வேலைத்திட்ட தினை முன்னெடுக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் கடந்த ஜனாதிபதித்தேரதலில் கல்முனைத்தொகுதி மக்கள் எனக்கு அதிகமான வாக்குகளை வழங்குனீர்கள் அதற்கு நான் இப்போது நன்றி கூறுகின்றேன்.நீங்கள் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக என்னைத்தெரிவு செய்தால் கல்முனைக்கு வந்து உங்களது தேவைளைப்பூர்த்தி செய்து தருவேன் எனவும் உறுதியளித்தார்
இதன் போது வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரால் எதிர்க்கட்சித்தலைவர் பொன்னாடை போர்த்திக்கெளரவிக்கப்பட்டதுடன் இளைஞர் ஒருவரால் கைப்பட மரத்தில் செதுக்கப்பட்டு வடிக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவரின் உருவப்படமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :