இன ஐக்கியத்தை வலியுறுத்தி த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிளோட்டியவருக்கு கௌரவமளிப்பு



பாறுக் ஷிஹான்-
ன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ சுல்பிகார் என்பவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் மாலை அணிவித்து உபசரித்து கௌரவமளித்தார்.

இன்று புதன்கிழமை(16) மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து இக்கௌரவமானது குறித்த சைக்கிளோட்ட வீரருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை(12) அன்று இலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை இவர் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து ஆர‌ம்பித்திருந்தார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளது.

நான்காவது நாளான இன்று குறித்த சைக்கிளோட்ட வீரர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கானினால் கௌரவிக்கப்பட்டு எதிர்காலத்தில் இலங்கையில் நடாத்தப்படவுள்ள தேசிய சைக்கிள் மரதனோட்ட போட்டியில் இணைத்து கொள்வதற்கு ஆவண செய்வதாக அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :