சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினெழு வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபயொருவர் விளக்கமறியலில்



எப்.முபாரக்-
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினெழு வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபயொருவரை அடுத்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று(29) உத்தரவிட்டார்.

முட்டுச்சேனை,மாவடிச்சேனை,வெருகல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த பதினெழு வயதுடைய பெண்ணொருவரை இரண்டு மாதங்களாக காதலித்து அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவித்து சந்தேக நபருக்கெதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளையும் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :