ஷிப்லி பாரூக்கிற்கு நன்றி தெரிவித்து கொண்டையன் கேணி மக்கள் வேண்டுகோள்..!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கிழக்குமாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் 200000 பெருமதியில் தனது தனிப்பட்ட முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவு, செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான கொண்டையன் கேணி கிராமத்திற்கான 150 மீற்றர் நீளமுடைய வீதிக்கான மின் இணைபினை பெறுவதற்கான வேலைகள் இடம் பெற்று வருக்கின்றது.

மேலும் அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் குறித்த மின் இணைப்பு சம்பந்தமாக ஷிப்லி பாரூக் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், மணல் ஒழுங்கைகளாக உள்ள பாதைகளை வீதிகளாக செப்பனிட்டு மாற்றித் தருமாறும், மீதியாக உள்ள ஒழுங்கைகளுக்கு மின் இணைப்பினை பெற்றுதரும் பட்சத்தில் ஆரம்ப கல்வியினை அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கற்கின்ற குறித்த பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை வேண்டி நிற்கின்றனர்.

அத்தோடு குறித்த வேண்டுகோளை பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நிறை வேற்றி தரும் பட்சத்தில் அப்பிரதேசத்தில் வசிக்கின்ற சகல மக்களும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கே வாக்களிக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் மறு பக்கத்தில் கடந்த மாகாண சபை தேர்தலில் கல்குடா பிரதேசத்து மக்கள் ஒன்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கு வழங்கியுள்ளமையினால் கல்குடா பிரதேசத்தின் அபிவிருத்திகளில் பெரும் பங்காற்ற வேண்டிய பொறுப்பு ஷிப்லி பாரூக்கிற்கு இருப்பதாகவும், அதனை அவர் அல்லாஹ்விற்கு பயந்து நடக்கின்ற அரசியல்வாதி என்ற அடிப்படையில் முடிந்தளவு நிறைவேற்றி வருவதாகவும், மேலும் பல அபிவிருத்திகளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்வார் என்ற தனக்கு இருப்பதாகவும் சமூக ஆர்வலராகவும் பிரதேசத்து மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி தீர்வுகளுக்காக நகர்த்தி வரும் சாட்டோ.வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -