புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நூலக திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது - படங்கள்

யாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம் அமைப்பின் தாயகம் என்ற பெயரிலான நூலகத் திறப்புவிழா இன்று (30.04.2016) சனிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் திருமதி. த.சுலோசனாம்பிகை (பிரதம போசகர், தாயகம் சமூக சேவையகம், புங்குடுதீவு) அவர்களது தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக வரவேற்று அழைத்து வரப்பட்டு தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல், தாயகக் கொடியேற்றம் இடம்பெற்றதோடு அதனைத் தொடர்ந்து தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது, 

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம், (தவிசாளர் வேலணை பிரதேச மத்தியஸ்த சபை மற்றும் தாயகம் சமூக சேவையகம் பிரதம ஆலோசகர்), செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு, (ஆலோசனை சபை உறுப்பினர், -தாயகம் சமூக சேவையகம்), திரு.அபிராஜ் வசந்தகுமார் (சுகாதார பரிசோதகர்), திரு. எஸ் சிவா (கிராம சேவகர்), செல்வி. ச.ஜனகா (கிராம சேவகர்), செல்வி. பவிஷானா, (தலைவர், -தாயகம் சமூக சேவையகம்), 

செல்வி காஞ்சனா (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்), திருமதி கேசவராஜா சசிகலா (சமூக நலன் விரும்பி) திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் "படைப்பாளிகள் உலகம்") சி.சாந்தகுமார் (நேசன் புடவையகம், புங்குடுதீவு,), திரு. கு.கைலைமலைநாதன் (புங்குடுதீவு நலன்விரும்பி – சுவிஸ் லீஸ்), திரு.பொன் வைரமுத்து (முன்னாள் உதவிக் காணி ஆணையாளர் கிளிநொச்சி), 

திரு.செல்லத்துரை உதயகுமார் (சமூக நலன் விரும்பி லண்டன்), மற்றும் திரு மதீஷன், திரு.சாந்தகுமார், திரு.ஸ்ரீ உட்பட மேலும் சில வேலணை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகர்களும், மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

மேற்படி நூலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக சென்று புங்குடுதீவு "அம்பலவாணர் அரங்கில்" கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா போன்ற பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. (இது குறித்த முழுமையான வீடியோக்களும், படங்களும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -