மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
வரவு செலவுதிட்டமானது யாருடையது? யாருக்கு? என்ற அடிப்படையில் அந்த கட்சி கொழும்பில் நேற்று (15) சிறப்பு கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்திருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த கருத்தினை தெரிவித்திருந்தார்.
அடுத்த வருடத்திற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது யாருக்கு? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
