ஐ.எஸ் ஐ கதிகலங்க வைக்கும் பெண்கள் யார் தெரியுமா..?

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்தீஷ் படையினர் போரிட்டு வருகின்றனர். குர்தீஷ் படைகளில் பெண்கள் படைபிரிவுகளும் உள்ளது. பெண்கள் வடக்கு சிரியா பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறார்கள்.

இந்த படைபிரிவுகளில் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் அதிகம் உள்ளனர். பெண்களால் கொல்லபட்டால் தாங்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என்ற நம்பிக்கை ஐ.எஸ் தீவிரவாதிகளிடையே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது பெண் படைவீராங்கனைகளுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரிவு அமைக்கபட்டு 3 வருடங்களாகிறது. ‘கொபானி’ நகரை மீட்பதில் இந்த படைபிரிவினர் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

இந்த படை பிரிவின் 21 வயது பெண் தளபதியான தெல்ஹெல்டன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்;

ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்களால் அல்லது குர்திஷ் பெண்களால் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என அவர்கள் நம்புகிறார்கள்.அதனால் தான் அவர்கள் பெண்களை பார்த்தால் பயப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -