மட்டக்களப்பு பாலமீன்மடு திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 19வது ஆண்டு நிறைவு விழா!

ந.குகதர்சன்-

மட்டக்களப்பு பாலமீன்மடு திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 19வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மா.உதயகுமார், கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் தா.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 2014ம், 2015ம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், 2013ம், 2014ம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், 2014ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்கள் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி பெற்றோர் சகிதம் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு சாதனையாளர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், ஆலய தொண்டர் படை உறுப்பினர்கள், மன்ற உறுப்பினர்கள், சமய போட்டியில் சித்தி பெற்ற மாணவர்கள் உட்பட பலருக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -