எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றம் செய்யாத நிரபராதி - மஹிந்த

ங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்களாகிவிட முடியாது. இதேவேளை எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றம் செய்யாத நிரபராதி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சகோதரருமான பஷில் ராஜபக்ஷவை பார்வையிடச் சென்று மீண்டும் வைத்தியசாலைக்குள் இருந்து வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றமும் செய்யவில்லை. அவர் நிருபராதி என்பதை நான் முழுமையாக நம்புகின்றேன். அவர் மீது உள்ள குற்றங்கள் என்ன, அதற்கான அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. 

தற்போது பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் யோசித்த ராஜபக்ஷ என ஒவ்வொருவரு மீதும் குற்றங்கள் சுமத்தப்படும். இவை அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் ஆகும்.

எனவே யார் யாரோ குற்றங்களை சுமத்துவதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் ஆகிவிட முடியாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -