திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்ட வேளையில், நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்வது, அவருக்கு அமைச்சு பதவி வழங்கியமை தொடர்பில் அல்லவெனவும் தெரிவித்தார்.

"நேற்று எதிர்கட்சி பொய்யான கதையொன்றை சோடித்தது. அது என்னவென்றால், அமைச்சு பதவி வழங்கியதால் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து நான் தேடிப்பார்த்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அமைச்சு பதவி வழங்கப்பட்ட போது நிதி கொடுக்கல்களும் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவந்தது. இது தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு பதவிகளுடன் நிதிகொடுக்கல்களும் இடம்பெற்றுள்ளன. 


இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் தங்களது சொத்து விபரங்களை உரிய முறையில் தெளிவுப்படுத்த தவறியுள்ளனர். இதனை தெளிவுப்படுத்துவதற்கே உரிய தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் நேற்று இருந்து இந்த குழப்பநிலையை மேற்கொண்டு வருகின்றனர்." 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவருவதை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் படி, வேட்பு மனு தாக்கல் செய்ய்பட்டதன் பின்னர் வேட்பாளருக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் பதவி வழங்கப்படுவதானது லஞ்சமாகவே கருதப்படும் என தெரிவித்தார்.

வசதி, பதவி பெறுவாரானால், வரப்பிரசாதங்களை பெறுவாரானால், அந்த வரப்பிரசாதம் பெறுவது, குறித்த தேர்தலில் போட்டியிரும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கவாக இருந்தாலும், அல்லது வேறு ஒரு வேட்பாளருக்கு பாதகமாக அமையும் வண்ணம் அமையுமாக இருந்தால் அது ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் லஞ்சமாகவே கருதப்படுகின்றது. என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -