பைக் நம்பர் பிளேட்டில் தமிழில் எழுத கூடாது என கூறி, ரூ100 அபராதம்

ண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், திருவள்ளுவர் குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (28). இவர், ஓட்டுனர் உரிமம் வேண்டி, தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நேற்று காலை, அதிகாரிகள் முன்பு, பைக் ஓட்டி காட்டுவதற்காக தனது நண்பர் கார்த்தி கேயன் பைக்கை எடுத்து சென்றார். அங்கு, பைக் ஓட்டுவதை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் ஜெய்தேவராஜ், பைக் நம்பர் பிளேட்டில் தமிழில் எண்கள் பதிக்கப் பட்டு இருந்ததை பார்த்தார். பின்னர், நம்பர் பிளேட்டில், எண்களை தமிழில் எழுத கூடாது என கூறி, ரூ100 அபராதம் விதித்தார்.

அதற்கு காரணம் கேட்டதற்கு முறையான பதில் கூறவில்லை. மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களின் பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற நிலை உள்ளபோது, தமிழில் பதிவு எண்ணை எழுதியவருக்கு அதிகாரிஅபராதம் விதிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘அரசு ஆணைப் படி வாகன நம்பர் பிளேட்டில் எழுத்துகள் முறையாக இருக்க வேண்டும். சிறிது, பெரிதாக இருக்க கூடாது என்று மட்டுமே கூறப்பட்டுள் ளது. பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என சட்டம் இல்லை’ என்றார்.

தமிழில் எழுத சட்டம் : மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 4.1, உட்பிரிவு 6, அறிவிப்பு எண் 827 (இ) 11.11.1992ன் கீழ், வாகனங்களின் நம்பர் பிளேட்டில், பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற சட்டம் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :