விபத்தின் மூலம் தனது கால்கள் ஊனமாக்கப்பட்டவர் தற்கொலை.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

காரைதீவு -08 ஆம் பிரிவைச் சேர்ந்த தம்பிராசா தங்கவடிவேல் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்
விபத்தின் மூலம் தனது கால்கள் ஊனமாக்கப்பட்டவர் என்றும் தனது மன உளைச்சலினாலும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் சம்பவ இடத்திற்கு காலையில் வந்த பொலிசாரும் நீதவானும் தொங்கிய நிலையிலிருந்த சடலத்தினை பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தினை மேலதிக பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டதன் பேரில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிவில் சடலம் உறவினர்களிடம் இறுதிக் கிரிகைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :